தமிழகம்

திருவிழாவிற்கு ராட்டினம் அமைக்கையில் சோகம்.. பரிதாபமாக பலியான உயிர்..!

Summary:

திருவிழாவிற்கு ராட்டினம் அமைக்கையில் சோகம்.. பரிதாபமாக பலியான உயிர்..!

கோவில் திருவிழாவிற்காக ராட்டினம் அமைக்கும்போது, இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் ராட்டினத்தின் தூணை உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சரி செய்துள்ளார்.

அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால், வேகமாக தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு வீரபாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே முத்துக்குமார் உயிரிழந்துள்ளார்.

பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement