தமிழகம்

பாலியல் பலாத்காரத்தால் பரிதாபம்.. 14 வயது சிறுமி தற்கொலை., தேனியில் அதிரவைக்கும் கண்ணீர் சோகம்.!

Summary:

பாலியல் பலாத்காரத்தால் பரிதாபம்.. 14 வயது சிறுமி தற்கொலை., தேனியில் அதிரவைக்கும் கண்ணீர் சோகம்.!

14 வயது சிறுமியை கத்தி முனையில் கயவன் பலாத்காரம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த 2 நாளில் தற்கொலை செய்துகொண்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, டொம்புச்சேரி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரின் மகன் மணிகண்டன் (வயது 25). இப்பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 வாரத்திற்கு முன்னதாக மணிகண்டன் சிறுமியை கத்தி முனையில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர், இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டவே, பயந்துபோன சிறுமி செய்வதறியாது இருந்துள்ளார். இதனை சாதகமாக்க நினைத்த கயவன் அடுத்த திட்டத்திற்கு தயாராக, சுதாரித்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதன்பின், கடந்த 24 ஆம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் மணிகண்டனின் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  


Advertisement