குடிகார கணவர் செய்த கொடூர செயல்; பரிதாபமாக துள்ளத்துடிக்க உயிரிழந்த மனைவி.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

குடிகார கணவர் செய்த கொடூர செயல்; பரிதாபமாக துள்ளத்துடிக்க உயிரிழந்த மனைவி.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!



theni-andipatti-wife-killed-by-husband-case-court-judge

 

தேனி ஆண்டிபட்டியை அடுத்த தென்னரசு நாயக்கனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சின்னத்தாய். இவர்கள் இருவரும் தென்னரச நாயக்கனூரில்  தூய்மை பணியாளராக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2015ல் சின்னத்தாய் அவருடைய கணவரிடம் மகளிர் குழுவிற்கு கட்ட வேண்டிய பணத்தை தன் கணவரிடம் கொடுத்து கட்ட சொல்லி இருக்கிறார்,

இதனைத்தொடர்ந்து, அவருடைய கணவர் அந்த பணத்தை மகளிர் குழுவிற்கு கட்டாமல் மதுபான கடைக்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மனைவி சின்னத்தாய், அவருடைய கணவரிடம் சண்டை போட்டுள்ளார். 

இதில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், கணவர் மனைவியின் கழுத்தின் அணிந்திருந்த தாலிக் கயிறை பிடித்து இறுக்கி கழுத்தை அறுத்து உள்ளார். இதனால் மனைவி சின்னத்தாய் அந்த இடத்திலேயே கதறி துடித்து உயிரிழந்துள்ளார்.

Theni

மனைவியை கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் கணவர், மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றும் அதனால் அவர் இறந்து விட்டார் என்றும் உறவினர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் மனைவியின் சகோதரர் பாண்டி என்பவர் தன்னுடைய சகோதரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வேல்முருகனிடம் கடும் விசாரணை மேற்கொண்டதில், அவர் தன் மனைவியின் கழுத்தை கயிற்றால் அறுத்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். தாங்கள் இருவருக்கும் பணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு சண்டை உண்டானதாகவும், இதனால் கோபமடைந்து இவ்வாறு கொலை செய்ததாகவும் வேல்முருகனே கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தேனி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிந்தது தீர்ப்பு வழங்கியது. வேல்முருகனே தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 ஆயிரம் அபராதமும் கட்ட  வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.