தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம்.!

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம்.!


theft in TR balu home

தி.மு.க. பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் வீடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ளது. இந்தநிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வீட்டில் இல்லாததால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. 

இந்தநிலையில், மர்ம நபர்கள் தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனைக் கொண்டும் கொள்ளையர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வீட்டில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.