கழிவறைக்குள் ஒளிந்திருந்து மாணவிகளை வீடியோ எடுத்த இளைஞர்... வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..!

கழிவறைக்குள் ஒளிந்திருந்து மாணவிகளை வீடியோ எடுத்த இளைஞர்... வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..!



The youth who took videos of the students hiding in the toilet...

கழிவறைக்குள் ஒளிந்திருந்து மாணவிகளை வீடியோ எடுத்த இளைஞரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளி மாணவிகள் சிலர் அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒளிந்திருந்த வாலிபர் ஒருவர் அவரது செல்போனில் அந்த மாணவிகளை வீடியோ எடுத்துள்ளார்.  இதை பார்த்த அந்த மாணவிகள் சத்தம் போட்டு கூச்சலிட்டனர். 

மாணவிகளின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாணவிகளிடம் நடந்த விவரத்தை கேட்டு அறிந்தனர். பின்னர் அந்த வாலிபரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர். அவரது செல்போனை பிடுங்கி உடைத்தனர். அதன் பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். 

உடனே, இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் ஹோட்டலில் வேலை செய்து வரும் மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது. காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.