உடல் நல குறைவால் மனமுடைந்த தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

உடல் நல குறைவால் மனமுடைந்த தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!


The unfortunate decision taken by the businessman who was depressed due to ill health.. The family is in shock..!

புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.எல்.பி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் புஷ்பக். இவர் அதே பகுதியில் மெட்டல் வியாபாரம் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த புஷ்பக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னலின் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் புஷ்பக்கை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

Business man

இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் புஷ்பக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.