ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தலாம்: பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தலாம்: பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!


The Tamil Nadu government has ordered 13,331 vacant teaching posts to be filled temporarily by school management committees

காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,  3188 , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வரை ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

TET

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ,உதவி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான நபர்களை தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.