பழிக்குப் பழி.... வீட்டில் துவங்கிய ரவுடி வெட்டிப் படுகொலை; மனைவியின் கண்முன்னே நடந்த கொடூரம்...!!



The raid started at home and killed; The brutality happened in front of his wife...

சென்னை ஆவடி அருகே உள்ள பொத்தூர் வள்ளி வேலன் நகரில் வசிப்பவர் யோகேஸ்வரன் (32). ரவுடியான இவர் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார். யோகேஸ்வரனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், யோகேஸ்வரன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், யோகேஸ்வரன் வீட்டில் புகுந்து அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த யோகேஸ்வரன் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். இதை பார்த்த யோகோஸ்வரனின் மனைவி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து யோகேஸ்வரனை கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளனர்.

சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் யோகேஸ்வரனின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், யோகேஸ்வரனுக்கும் அவரது நண்பர் சுறா என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2016-ஆம் வருடம் யோகேஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து மீன் வியாபாரியான சுறாவை வீட்டில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார். சுறாவின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் யோகேஸ்வரனை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் தாக்கியுள்ளனர். அதில் யோகேஸ்வரன் தப்பியுள்ளார். இந்த நிலையில் காவல்துறையினரின் மெத்தன போக்கால் இந்த கொலை நடைபெற்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.