உணவு டெலிவரி ஏஜென்டை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து காவலர் கைது.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

உணவு டெலிவரி ஏஜென்டை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து காவலர் கைது.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!



The police who attacked the food delivery employee

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கோவை பீளமேடு காவல் நிலைய சிக்னல் அருகே தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதை கவனித்துள்ளார்.

இதனையடுத்து மோகனசுந்தரம், அந்த பள்ளி வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி பெண்ணை இடித்தது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளார். அந்த சமயத்தில் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சிக்னலில் பணியிலிருந்த சிங்காநல்லூர் போக்குவரத்து காவலர் சதிஷ், பள்ளி வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் மோகனசுந்தரத்தை தாக்கியுள்ளார்.

 இதனை, அந்த வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் போக்குவரத்து காவலர் சதிஷ், உணவு விநியோகம் செய்பவரை இரண்டு முறை அறைந்ததும், மேலும் அவரது மொபைல் போனைப் பறித்துச் சென்றதும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மோகனசுந்தரம் சனிக்கிழமை மாநகரக் காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட காவலர் சதிஷ் பணியிட நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது  வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். பின் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.