பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு... காதல் ஜோடி காலில் விழுந்த தாய்.! இறுதியில் நடந்த சம்பவம்.!
பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு... காதல் ஜோடி காலில் விழுந்த தாய்.! இறுதியில் நடந்த சம்பவம்.!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சஞ்ஜீவ்காந்தி. 24 வயது நிரம்பிய இவர் ஓசூர் பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவர் பக்கத்து ஊரை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விஷயம் இரு வீட்டார் பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், அப்பெண்ணின் பெற்றோர் தனது மகளை கண்டித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் காதலர் தினமான நேற்று கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். அதனை தொடர்ந்து, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து இரு வீட்டார் பெற்றோர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் தாயார் பெண்ணின் காலை பிடித்து கதறி அழுதுள்ளார். ஆனாலும் அப்பெண் தனது காதலனுடன் செல்வதாக கூறியதால் அப்பெண் மேஜர் என்பதால் போலீசார் காதலனுடன் அனுப்பி வைத்தனர்.