காவல்துறை விசாரணைக்கு அழைத்த விரக்தியில்... கணவன் மற்றும் மனைவி விஷம் குடித்து தற்கொலை.!

காவல்துறை விசாரணைக்கு அழைத்த விரக்தியில்... கணவன் மற்றும் மனைவி விஷம் குடித்து தற்கொலை.!


the-police-called-for-an-investigation-husband-and-wife

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூரில் புகார் மனு மீதான விசாரணைக்கு இரு தரப்பினரையும் அழைத்து  விசாரணை செய்ய இருந்ததால்  மனம் உடைந்த கணவன் மற்றும் மனைவி  விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர் ரங்கன்(65). இவரது மனைவி செல்லம்மாள்(59). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் கோவிந்தராஜ் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஊர் திரும்பிய அவர் ஈரியூர்  கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் சேர்ந்து 17 லட்சத்திற்கு நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை வாங்கி தொழில் செய்து வந்துள்ளனர். ஒத்த பணமான 17 லட்சம் ரூபாயில் ஆளுக்கு  எட்டரை லட்சம் என கடனை பகிர்ந்து கொண்டனர்.

tamilnadu

இந்நிலையில் செல்வத்திடம் இருந்த நெல் அறுக்கும் இயந்திரத்தை கோவிந்தராஜ் தனது வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக செல்வோம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து மேலூர் காவல்துறையினர்  கோவிந்தராஜ் அவரது தந்தை ரங்கன் மற்றும் தாயார் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது செல்வத்திற்கு எதிராக  கோவிந்தராஜன் புகார் அளித்திருக்கிறார்.

tamilnadu

இது தொடர்பாக இரு தரப்பினரையும் மீண்டும் விசாரணைக்கு அழைக்க காவல்துறை முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு மனமுடைந்த கோவிந்தராஜின் தந்தை ரங்கன் மற்றும் தாய்  செல்லம்மாள் ஆகிய ஒரு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.