வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது.! என்ன காரணம்.? வீரலட்சுமி கொடுத்த தகவல்.!
வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது.! என்ன காரணம்.? வீரலட்சுமி கொடுத்த தகவல்.!

சென்னை இராமாபுரத்தை சேர்ந்தவர் கி.வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார். தமிழக மக்களின் பல பிரச்சனைகளில் தலையிட்டு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தவர். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் "மை இந்தியா பார்ட்டி" போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், காவேரி மேகதாது அணையை எதிர்த்து போராட்டம் நடத்த அமைப்பினருடன் ஆலோசனை நடத்திய போது, இவருக்கு ஆபாச வீடியோக்கள் முகநூல் வழியாக மர்ம நபர் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே கொடுத்த புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், கடந்த வாரத்தில் கையில் அரிவாளுடன் மர்ம நபர்களை எச்சரித்து வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், வீரலட்சுமிக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் ஆண்டிமடத்தை சேர்ந்த டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆரோக்கியசாமி (வயது 38) கேரளாவில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீரலட்சுமி பதிவு செய்த முகநூல் பதிவில், ஆபாச வீடியோ அனுப்பிய குழு தலைவனையே நாங்கள் கண்டுப்பிடித்துவிட்டோம் உறவுகளே. எனக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு தனி பகையும் இல்லாமல் ஏன் ஆபாச வீடியோ அனுப்பி எனக்கு தொல்லை தர வேண்டும் என்று ஆராயும் பொழுது மூன்று காரணங்கள் அறியப்படுகிறது.
நான் வன்னியர் பெண் என்பதாலும், எந்நேரமும் நான் திருநீரு பொட்டு வைப்பதும், என்னுடைய வீரலட்சுமி என்ற பெயரும் தான் அவர்களுக்கு வெருப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே அவர்கள் ஆபாச படங்களை அனுப்பியுள்ளனர். நான் எந்த மதத்தையும், சமூகத்தையும் இதுவரைக்கும் வெறுக்கத்தக்க அல்லது அவதூறு செய்யும் வகையில் பேசியதில்லை என குறிப்பிட்டு இருந்தார்.