தமிழகம்

14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய கொத்தனார்.! பேரதிர்ச்சியடைந்த பெற்றோர்.!

Summary:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ம

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.

இந்தநிலையில், குளித்தலை அருகே  14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கொத்தனார் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குளித்தலை அருகே உள்ள அய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். 23 வயது நிரம்பிய இவர் கொத்தனார் வேலை செய்துவந்துள்ளார். இவர் 14 வயதான சிறுமி ஒருவரை காதலித்து, அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். 7 மாத கர்ப்பிணியான நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அச்சிறுமி சக்திவேலிடம் கேட்டார். ஆனால் அவர் அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்ளாமல் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Advertisement