18 ஆண்டுகளுக்கு முன் இறந்த தாய்...அம்மா கூப்பிடறாங்க என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட மகன்..!!

18 ஆண்டுகளுக்கு முன் இறந்த தாய்...அம்மா கூப்பிடறாங்க என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட மகன்..!!


The incident where the son, who had been mentally implanted for 18 years, hanged himself after posting on Instagram

தண்டையார்பேட்டையில் தாய் இறந்து 18 வருடங்களாக மனதளவில் பதிக்கப்பட்ட மகன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தண்டையார்பேட்டையில் உள்ள முருகேசன் தெருவவில் வசித்து வருபவர் ரஞ்சிதா (29). இவர், தந்தை மற்றும் தம்பி ராஜீ (27) ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜீ பாரிமுனையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இவர்களது தாய் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் ராஜீ தாயை நினைத்து மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

கடந்த ஒருவாரமாக, ‘தாயை பார்க்க ஆசையாக உள்ளது என ராஜீ கூறி உள்ளார். என்னை அம்மா கூப்படுகிறார் என சகோதரி ரஞ்சிதாவிடம் கூறி உள்ளார். மேலும் இதுகுறித்து, இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அனைவரும் உறங்கச் சென்றனர். இரவு 11 மணி அளவில் ரஞ்சிதா இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்த போது, ராஜீ வீட்டில் இல்லாததால் அவரை தேடி வெளியில் வந்து பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டின் கேட் முன்பு ரஞ்சிதாவின் துப்பட்டாவில் ராஜீ தூக்கில் தொங்குவதை பார்த்து ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து ராஜீ உடலை கீழே இறக்கி பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராஜீ உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில். ராஜீன் தாய் இறந்தது முதல் கடந்த 18 ஆண்டுகளாக ராஜீ மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் சம்பவத்தன்று தாய் தன்னை அழைப்பதாகவும், அம்மாவை பார்க்கவேண்டும் என கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ராஜீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.