செய்வினை வைத்ததாக மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனார்.. மூடநம்பிக்கையின் உச்சத்தால் ஈரோட்டில் பதறவைக்கும் சம்பவம்.!The father-in-law murdered his daughter-in-law

தனது மருமகள் எனக்கு செய்வினை வைத்ததன் காரணமாகவே உடலநலக்குறைவு ஏற்பட்டது என எண்ணிய மாமனார், மருமகளை வெட்டி கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை, சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி (வயது 65). இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ராமசாமியின் மனைவி இறந்துவிட்டார். 

அவரின் மகன்களும் ராமசாமியை சரிவர கவனிக்காத காரணத்தால், தனிமையிலேயே இருந்துள்ளார். சமீபகாலமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லம்மாள் இருந்துள்ளார். தனது மகன்களின் வீட்டில் சுழற்சி முறையில் சென்று உணவு சாப்பிட்டும் வந்துள்ளார். 

இதற்கிடையே, தனது உடல்நலம் பாதிக்கப்பட மருமகள் செய்வினை வைத்ததே காரணம் என ராமசாமி கருத்தியுள்ளார். நேற்று சென்னிமலை மணிமலையில் இருக்கும் மூத்த மகன் வீட்டிற்கு சென்றபோது, மூத்த மருமகள் ஜோதிலட்சுமியோடு தகராறு ஏற்பட்டுள்ளது.

Latest news

நீ எனக்கு செய்வினை வைத்ததன் காரணமாகவே வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறேன் என வாக்குவாதம் செய்துள்ளார். இதில், வாக்குவாதம் முற்றி ஜோதிலட்சுமியை அவர் அரிவாளால் வெட்டியுள்ளார். 

ஜோதிலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னிமலை காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.