14 வயது சிறுமியை சீரழித்து சிக்கிய முதியவருக்கு நேர்ந்த கதி!.. இனி அனைவருக்கும் பாடம்..!

14 வயது சிறுமியை சீரழித்து சிக்கிய முதியவருக்கு நேர்ந்த கதி!.. இனி அனைவருக்கும் பாடம்..!


The fate of the old man who raped the 14-year-old girl

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகேயுள்ள போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிகம் (70).  அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது மன வளர்ச்சி குன்றிய சிறுமியை ராஜமாணிக்கம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தாய், ராஜமாணிக்கம் மீது மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராஜமாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்த மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பின்னர், செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி ராஜமாணிக்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதால் ராஜமாணிக்கத்துக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.