பட்ட பகலில் பிரபல ரவுடியை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள்! புதுக்கோட்டையில் பரபரப்பு!

the famous Rowdy murdered in pudukkottai


the famous Rowdy murdered in pudukkottai


புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் என்கிற சுரே‌‌ஷ் பாண்டியன். 32 வயது நிரம்பிய இவர் இவர் மீது புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் நேற்று காலையில் சுரே‌‌ஷ்பாண்டியன் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் ஆகியோர் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரே‌‌ஷ்பாண்டியனை வெட்டி கொலை செய்தனர். இதைக்கண்ட அவரின் நண்பர் ஆனந்த் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் ஆனந்தையும் மர்மநபர்கள் வெய்ட்டிவிட்டு அங்கிருந்து  தப்பி சென்று விட்டனர்.

     Murder

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சுரே‌‌ஷ்பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.