தகராறை தட்டிக் கேட்டவர்களின் காதை அறுத்த கொடுமை... ஆத்திரத்தில் கூலி தொழிலாளியின் கைவரிசை..!!

தகராறை தட்டிக் கேட்டவர்களின் காதை அறுத்த கொடுமை... ஆத்திரத்தில் கூலி தொழிலாளியின் கைவரிசை..!!


The cruelty of cutting off the ears of those who heard the dispute... the hand of the laborer in rage..

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் எலக்ட்ரீசியன் பொம்முலுசாமி (48). இவர் வேலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக உறவினர்களான யுவராஜ் மற்றும் ஹரிகவுதம் ஆகிய இரண்டு பேரை போடிக்கு அனுப்பி வைத்தார். 

அப்போது, போடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாரதிராஜா (45) என்பவருக்கும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த யுவராஜுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதிரமடைந்த பாரதிராஜா யுவராஜை தாக்கியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பொம்முலுசாமி பாரதிராஜாவை தட்டி கேட்டுள்ளார். அப்பொழுது பாரதிராஜா அவர் வைத்திருந்த கத்தியால் பொம்முலுசாமியின் இடது காதை அறுத்துள்ளார். 

இந்நிலையில் அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இதை பார்த்து தட்டி கேட்டுள்ளார். அதற்கு பாரதிராஜா ஆட்டோ ஓட்டுநரின் இடத்துக்காதை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தப்பி ஓடிய பாரதிராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.