BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை.. சற்று நேரத்தில் பிணமாக மீட்ட பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்..!
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள குண்டுமணிபட்டியில் வசித்து வருபவர்கள் வேதாச்சலம் - கல்பனா தம்பதியினர். இவர்களுக்கு சிந்துஜா, சஹானா என்று இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சஹானா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் சஹானா எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் பதற்றம் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வீட்டின் அருகே அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. ஒருவேளை குழந்தை தவறி மழைநீர் தேங்கியுள்ள குழியில் விழுந்து இருக்குமோ என்று சந்தேகத்தில் உறவினர்கள் குழியில் இறங்கி தேடியுள்ளனர்.
அப்போது காணாமல் போன சஹானா மழைநீர் தேங்கிய குழுயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி துடித்த காட்சிகள் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.