மர்ம நபர்கள் கைவரிசை!.. வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு...!!

மர்ம நபர்கள் கைவரிசை!.. வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு...!!


The cars parked in front of the house suddenly burst into flames and there was a commotion

சென்னையில் பழவந்தாங்கலில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அதிகாலையில் தீப்பற்றி எறிந்த சம்பவம் அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் உள்ள தணிகை வேம்படி சக்தி விநாயகர் கோவில் தெருவில் அதிகாலையில் இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்தன. அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இரண்டு  கார்கள் தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.  இரண்டு வாகனகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பதினைந்து நிமிட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. ராஜேஷ் என்பவரின் ஹூண்டாய் கார், மற்றொன்று கோபிக்கு என்பவருக்கு சொந்தமான மருதி அல்டோ கார் என தெரியவந்துள்ளது, இந்த இரண்டு கார்களும் அவர்களின் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார்கள் மர்மனான முறையில் தீப்பற்றி எறிந்துள்ளது.

எனவே யாராவது கார்களுக்கு தீ வைத்தார்களா, என்று அப்பகுதிலுள்ள சிசிடிவி காட்சிகளை, காவல்துறையினர் ஆய்வுசெய்து, அந்த பகுதியில் உள்ள மக்களை விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலை வேலையில் கார்கள் தீ பற்றி எறிந்த சம்பவம் பழவந்தாங்கல் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.