BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மது போதையில் தாறுமாறாக ஓடிய கார் !! இரு சக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் பலி..!
தூத்துக்குடி கடற்கரை சாலையில் போல் பேட்டையை சேர்ந்த விஜய் கணேஷ் தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். காரை ஓட்டிக் கொண்டு வந்த விஜய் கணேஷ் மது அருந்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் காரை தாறுமாறாக ஓட்டி வந்த அவர் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் வாகனங்கள் மீது மோதியுள்ளர்.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தூத்துக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஹரி மற்றும் தாளமுத்து பகுதியை சேர்ந்த வன்னிய ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்ற திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாலா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த பாலா மற்றும் ரவியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து ஹரி மற்றும் வன்னிய ராஜா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.