நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி யார் தெரியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
நிச்சயமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மணமகன்.. தடைபட்ட திருமணத்தால் போலீசில் புகார்..!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்பிறகு பாலாஜி அந்தப் பெண்ணிடம் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கல்யாணத்திற்கு திருமண மண்டபம் பார்க்க வேண்டும் என்று கூறி பாலாஜி தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அந்தப் பெண்ணும் தனது வருங்கால கணவர்தானே என்று உல்லாசமாக இருப்பதற்கு சம்மதம் சொல்லி உள்ளார்.

இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பாலாஜி திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் அந்த இளம் பெண்ணுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண்ணின் குடும்பத்தார் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாலாஜியை கைது செய்த ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலாஜியிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண் ஏமாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.