14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!


the-boy-who-cheated-on-the-girl-and-made-her-pregnant

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. 

இந்த நிலையில், தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

இவர்களது பழக்கம் நெருக்கமானதையடுத்து சிறுவன் சிறுமியை கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில், சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

இதனையடுத்து போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு சென்றனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.