சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
தஞ்சாவூர்: சென்டர்மீடியனில் அமர்ந்து சரக்கடித்த 3 நண்பர்கள் லாரி மோதி அகால மரணம்.!!
தஞ்சாவூர்: சென்டர்மீடியனில் அமர்ந்து சரக்கடித்த 3 நண்பர்கள் லாரி மோதி அகால மரணம்.!!

சாலையின் நடுவே இருக்கும் சென்டர்மீடியனில் அமர்ந்து மதுகுடித்த நண்பர்கள் 3 பேர், லாரி மோதி விபத்தில் பலியான சோகம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம், நாட்டாணி பகுதியை சார்ந்தவர் பிரசாந்த் (வயது 41). இவர் கான்ட்ராக்டராக பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள மருங்கை பகுதியை சார்ந்தவர் சுதாகர் (வயது 27). அசூரமங்கலம் பகுதியை சார்ந்தவர் சந்திரசேகர் (வயது 32). இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள்.
இவர்கள் மூவரும், இன்று அதிகாலை நேரத்தில் காரில் பிரசாந்த், சுதாகர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சந்திரசேகர் ஆகியோர் புறப்பட்டு தஞ்சாவூரை அடுத்துள்ள கடகடப்பை பகுதியில் உள்ள கும்பகோணம் நெடுஞ்சாலைக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கு சாலையோரமாக கார் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, சென்டர் மீடியன் பகுதியில் அமர்ந்து மதுபானம் குடித்துள்ளனர்.
இதன்போது, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதில், சாலையின் சென்டர் மீடியனில் அமர்ந்து மதுபானம் அருந்திய பிரசாந்த், சுதாகர், சந்திரசேகர் மீது மோதி, இவர்கள் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மீது மோதி நின்றுள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில் பிரசாந்த், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தஞ்சாவூர் காவல் துறையினர், விரைந்து வந்து அவசர ஊர்தியின் உதவியுடன் பலியான மூவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.