பயங்கரம்.. பட்டாசு குடோனில் வெடி விபத்து.. பணியில் இருந்த பெண்கள் உடல் சிதறி பலி.. நிதி உதவி வழங்கிய முதலமைச்சர்..!

பயங்கரம்.. பட்டாசு குடோனில் வெடி விபத்து.. பணியில் இருந்த பெண்கள் உடல் சிதறி பலி.. நிதி உதவி வழங்கிய முதலமைச்சர்..!


terribleexplosion-in-firecrackers-godownwomen-who-were

தர்மபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவற்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில் நாட்டு வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை 3 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து குடோன் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

இதனையடுத்து இந்த பட்டாசு குடோனில் பணிபுரிந்த பழனியம்மாள் மற்றும் முனியம்மாள் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாயினர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Explosion in fire crackers

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.