ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! வெளியானது கால அட்டவணைTenth public exam starts on june 10th

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கால அட்டவணைப்படி ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஜூன் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

அட்டவணை விவரம்:
ஜூன் 1:   மொழிப்பாடம்
ஜூன் 3:   ஆங்கிலம்
ஜூன் 5:   கணிதம்
ஜூன் 6:   விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8:   அறிவியல்
ஜூன் 10:  சமூக அறிவியல்
ஜூன் 12:  தொழிற்பிரிவு தேர்வு