குழந்தை திருமணம் செய்த சிறுமி 5 மாத கர்ப்பம்.. கணவன், 2 குடும்பத்தினர் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு..!

குழந்தை திருமணம் செய்த சிறுமி 5 மாத கர்ப்பம்.. கணவன், 2 குடும்பத்தினர் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு..!


Tenkasi Puliyangudi Minor Girl Child marriage 5 MOnth Pregnancy

17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் உட்பட இருதரப்பு பெற்றோரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, சொக்கம்பட்டியில் வசித்து வருபவர் ராஜு. இவரின் மகன் அய்யன்குமார் (வயது 29). குமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரின் விபரத்தை பதிவு செய்கையில் சிறுமிக்கு 18 வயதுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது அம்பலமானது. 

Tenkasi

இதனையடுத்து, வாசுதேவநல்லூர் யூனியன் ஊர்நல அலுவலர் முத்தம்மாள் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், சிறுமிக்கு இருதரப்பு பெற்றோருடன் திருமணம் நடந்தது உறுதியாகவே, போக்ஸோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.