இதுவல்லவோ சுயஉதவிக்குழு.. சேமிப்பு பணத்தில், 32 பெண்கள் விமானத்தில் சென்னை சுற்றுலா.. ஜெயிஸ்டாங்க மாறா.!

இதுவல்லவோ சுயஉதவிக்குழு.. சேமிப்பு பணத்தில், 32 பெண்கள் விமானத்தில் சென்னை சுற்றுலா.. ஜெயிஸ்டாங்க மாறா.!



tenkasi-keezhapavur-woman-welfare-fund-tour-via-flight

தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக, பல்வேறு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்படுகிறது. கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்தில் மட்டும் 43 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இக்குழுக்களின் கூட்டமைப்பில் வங்கியில் குடும்ப செலவுக்கு குறைந்த வட்டியில் கடனை பெற்று, அதனை செலுத்துவத்தின் மூலமாக கிடைக்கும் இலாபத்தில் வரும்தோறும் தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்கி சிறுசேமிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த வருடத்தில் சிறுகச்சிறுக சேமித்து வைத்த பணத்தில் சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவு செய்து, பெண்களின் ஆலோசனைப்படி மெட்ரோ இரயில் மற்றும் மின்சார இரயில், விமானத்தில் இதுவரை பயணம் செய்ததில்லை என்பதால், சென்னைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 3 குழுக்களை சேர்ந்த 32 பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் தலைவி மெர்ஸியின் தலைமையில் வேன்கள் மூலமாக மதுரை விமான நிலையம் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

Tenkasi

சென்னைக்கு வந்த பெண்கள் மெட்ரோ இரயில், மின்சார இரயில்களில் பயணம் செய்து சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர். சென்னை எழும்பூர் அருங்காட்சியகம், அண்ணா - எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா - கருணாநிதி ஆகியோரின் நினைவிடம் மற்றும் மெரினா கடற்கரையையும் கண்டு ரசித்தனர். 

சுற்றுலா தளங்களை பார்த்துவிட்டு இரவில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு இரயிலில் பயணம் செய்து ஊருக்கு சென்றனர். கிராமப்புற பெண்களை பொறுத்த வரையில் விமானம் மற்றும் சென்னை போன்ற நகரின் பயணம் கனவாக இருந்த நிலையில், அவை நல்லதொரு சுயஉதவிக்குழு கூட்டமைப்பால் நிறைவாகியுள்ளது.