64 வயது தந்தை.. 3 பெண் பிள்ளைகள்.. அன்பு காட்டிய தந்தைக்கு மகள்களின் செயலால் நிகழ்ந்த விபரீதம்.!

64 வயது தந்தை.. 3 பெண் பிள்ளைகள்.. அன்பு காட்டிய தந்தைக்கு மகள்களின் செயலால் நிகழ்ந்த விபரீதம்.!


tenkasi-father-sucide-three-daughters-married-for-love

தென்காசி மாவட்டம் புளியங்குடி பேச்சி அம்மன் தெருவில் வசித்து வருபவர் மாயாண்டி(64).இவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. 

இந்நிலையில் மாயாண்டியின் முதல் இரண்டு பெண்களும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் மன வருத்தம் இருந்த நிலையில் அதனை வெளியில் காட்டி கொள்ளாமல் இருந்துள்ளனர். தனது மூன்றாவது மகளையாவது தங்களது விருப்பப்படி திருமணம் செய்து வைக்கலாம் என நினைத்துள்ளனர். 

Tenkasi

ஆனால் மூன்றாவது மகளும் உறவினர் வீட்டு பையன் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி காதலனுடன் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளான மாயாண்டி பூச்சு மருந்து சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். மகள்களின் நடவடிக்கையால் தந்தை செய்த இந்த காரியம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.