குடி போதையில் மனைவி, 13 வயது மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : காமுக தந்தை கைது...!

குடி போதையில் மனைவி, 13 வயது மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : காமுக தந்தை கைது...!


Tenkasi Alangulam a Drunken Man Sexual Torture own Daughter Arrest Pocso Act

மது என்ற அரக்கனை குடித்த தந்தை இரவு நேரத்தில் போதையில் மனைவி, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பகீர் சம்பவம் தென்காசியை அதிரவைத்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில் வசித்து வரும் இளம்பெண், ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், "எனது கணவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். தினம் அவர் வேலைக்கு சென்று மதுபானம் குடித்துவிட்டு தன்னை அடித்து தொந்தரவு செய்து வருகிறார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவே, சிறுமியின் 13 வயது மகளிடம் தனியாக விசாரணை நடந்தது. அப்போது, மதுபோதையில் வரும் காமுகன், தனது மனைவிக்கு பாலியல் தொல்லை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளான். மேலும், போதை அதிகமாக இருக்கும் நேரங்களில் சொந்த மகளிடமும் சீண்டல் செய்துள்ளான். 

Tenkasi

கடந்த 4 ஆண்டுகளாக காமுகன் இரவு நேரங்களில் சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிவந்த பகீர் தகவல் உறுதியானது. இதனையடுத்து, கயவனின் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கைது செய்ய விரைந்துள்ளனர். இந்த தகவலை அறிந்தவன் தலைமறைவாகியுள்ளான். 

பெற்றெடுத்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகன் தலைமறைவானதை உறுதி செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.