15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்.. தோட்டத்தில் உரிமையாளர் நடத்திய பயங்கர செயல்.. தென்காசியில் பேரதிர்ச்சி.! 

15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்.. தோட்டத்தில் உரிமையாளர் நடத்திய பயங்கர செயல்.. தென்காசியில் பேரதிர்ச்சி.! 


Tenkasi Alangulam 15 Aged Minor Girl sexual Abuse

ஆலங்குளம் அருகே தோட்டத்தின் உரிமையாளர் வேலைக்கு வரும் பெண்ணின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், ஊத்துமலையில் வசித்து வருபவர் இராதாகிருஷ்ணன் (வயது 34). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இவருக்கும், பெண்மணிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால், இருவருக்கும் குழந்தை இல்லை. 

இராதாகிருஷ்ணனுக்கு சொந்தமாக தோட்டம் உள்ள நிலையில், தோட்டத்திற்கு வேலைக்கு வரும் பெண்ணின் மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன் சிறுமியை மிரட்டி இராதாகிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது.

Tenkasi

இதனால் மாணவி கர்ப்பமாகவே, சிறுமியின் பெற்றோர் இராதாகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர். அவனோ சிறுமியை நானே திருமனம் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளதாக தெரியவருகிறது. இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் இராதாகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் காமுகன் சிறையில் அடைக்கப்படவே, மருத்துவ பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.