போக்குவரத்துக்கு துறை அறிவிப்பு: பொங்கல் விடுமுறைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம்!.

போக்குவரத்துக்கு துறை அறிவிப்பு: பொங்கல் விடுமுறைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம்!.


temporary-bus-stand-for-pongal-festival

2019ஆம்  ஆண்டின் முதல் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுவது பொங்கல், பொங்கல் விழா இந்தமாதம் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதற்கான விடுமுறை தினத்தில் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Pongal 2019

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களின் விவரங்கள்:


தாம்பரம்(சானிடோரியம் MEPZ): 

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் - சானிடோரியம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

மாதவரம்: 

ஆந்திர வழியாக செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.


கே.கே.நகர்: 
ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி: 

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஒசூர் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கோயம்பேடு: 

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்குடி, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.