
Teachers dipawali leave
தமிழக பள்ளி கல்வி துறை தீபாவளிக்கு முன்பும், பின்பும் விடுமுறைகள் இல்லை என அறிவித்துள்ளது.இந்த வருடம் தீபாவளி ஞாயிறுக்கிழமை வர உள்ளது.
எனவே அதற்கான ஏற்பாடுகளை இரண்டு நாட்களுக்கு முன்பே துவங்கி விடுவார்கள். அப்படி இருக்க பள்ளிகள் விடுமுறை இல்லை என அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
அதிலும் தனது சொந்த ஊருக்கும் செல்லும் ஆசிரியர்களின் நிலைமை கேள்வி கூறியாக உள்ளது. மேலும் இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் வெளியிட்ட அறிக்கையில் தீபாவளி பண்டிகைக்காக, முதல் நாளிலிருந்தே ஏற்பாடுகள் செய்வதால், அந்த நாளில் பள்ளிகள் செயல்படுவது, பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
மேலும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தாலும், மறுநாள் தீபாவளி என்பதால், மாணவர்களின் வருகையும், ஆர்வமும் குறைவாக இருக்கும். எனவே, வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement