தமிழகம்

மாணவியுடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட காதல்! வாட்ஸ் அப்பில் ஆசிரியர் செய்த காரியத்தால் நேர்ந்த விபரீதம்!

Summary:

teacher love with student

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சிவஞானசம்பந்தம் என்பவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். இவரும், அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவியும் மிக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, கடந்த மாதம் 30-ஆம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. காதலிக்கு விரைவில் கல்யாணம் நடக்க இருந்ததை கேள்விப்பட்ட சிவஞானசம்பந்தம் ஆத்திரத்தில் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து, பெண்ணை பற்றி தவறாக கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் காதலித்தபோது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மாப்பிள்ளையின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார். இதனைப்பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை அவரது குடும்பத்தாரிடம் கூறி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

whats aap\ க்கான பட முடிவு

இதனால் மனமுடைந்து போன பெண், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். பெண் மயங்கி விழுந்ததை கண்ட அவரது குடும்பத்தினர், அதிர்ச்சியில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் வேதனையடைந்த பெண்ணின் தந்தை, சிவஞானசம்பந்தத்தை சந்தித்து இதை பற்றி கேட்டுள்ளார். ஆனால் வயது வித்தியாசம் பார்க்காமல், உனது மகளை வேறு யாருக்காவது திருமணம் பண்ணி கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் மேலும் மனவேதனையடைந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் சிவஞானசம்பந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement