ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு; கால அவகாசம் நீட்டித்து வெளியான புதிய அறிவிப்பு.!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு; கால அவகாசம் நீட்டித்து வெளியான புதிய அறிவிப்பு.!



Teacher eligibility test - externed date - applying

8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் கடந்த 15ம் தேதி முதல் வழங்கப்படது. மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 5 என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பிப்பதில் இடையூறு ஏற்பட்டது என பலர் புகார் கூறியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 12 வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.