மது திருவிழா! கொண்டாடும் குடிமகன்கள்! ஜல்லிக்கட்டு விழா போல் அலைமோதும் கூட்டம்!

மது திருவிழா! கொண்டாடும் குடிமகன்கள்! ஜல்லிக்கட்டு விழா போல் அலைமோதும் கூட்டம்!


Tasmak opened today

டாஸ்மாக் கடைகளில் தொடங்கியது விற்பனை - 44 நாட்களுக்குப் பிறகு மது பாட்டில்களை தொட்ட மகிழ்ச்சியில் குடிமகன்கள்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

Tasmak

இதனையடுத்து இன்று காலை 10 மணி முதல் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் முழு பாதுகாப்புடன், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் நின்று குடிமகன்கள் மதுவை வாங்குவதற்காக நின்று வருகின்றனர்.

நீண்ட நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்துவந்தநிலையில், இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பல இடங்களின் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.