
Tasmak leave for election
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதன் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.
வரும் 18-ம் தேதி தமிழகத்தில் 39 மக்களவைக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது.
அதில், மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணிநேரத்துக்கு முன்பே மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மக்களவை தேர்தலுக்காக வரும் ஏப்ரல் 16, 17, 18, ஆகிய தேதிகளிலும், மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதால் மே 23 ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மக்களின் மனநிலை டாஸ்மாக்கிற்கு எப்பொழுது நிரந்தரமாக விடுமுறை விடப்படும் என்று தான் இருக்கின்றது.
Advertisement
Advertisement