கொரோனா வைரஸ் எதிரொலி! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! அலைமோதும் கூட்டங்கள்!

கொரோனா வைரஸ் எதிரொலி! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! அலைமோதும் கூட்டங்கள்!



tasmak closed for corona

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 107 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Tasmak

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் வரும் 31ந்தேதி வரை உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பற்றி வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதில் இருந்து டாஸ்மாக் கடைகளில் அலைமோதுகின்றனர் பொதுமக்கள்.