
இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவி
இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கு காலத்தில் எவை எவை இயங்கும், எவற்றிற்கெல்லாம் தடை என்ற பட்டியலையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் காலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக டாஸ்மாக் கடைகள் செய்லபடும் நேரம் மாற்றப்பட்டது. காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது வரும் திங்கள் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட இருப்பதால் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement