தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை! மின்வாரியம் அறிவித்துள்ள முழு லிஸ்ட் இதோ...



tamilnadu-power-shutdown-maintenance-schedule

தமிழகத்தில் மின்விநியோக அமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாளை பல்வேறு மாவட்டங்களில் திட்டமிட்ட முறையில் மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டம் மின்தடை

சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

இதையும் படிங்க: சென்னையில் செப்டம்பர் 6ஆம் தேதி( இன்று ) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ.....

ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி

ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, பாலமங்கலம், வீரசங்கிலி, வேலங்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், உரிகம், தக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

Tamil Nadu Power Cut

மதுரை, மேட்டூர் மற்றும் மற்ற பகுதிகள்

மதுரையில் கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை அமலாகும். மேட்டூர், பெரம்பலூர், தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முக்கிய தகவல்

சித்தம்பூண்டி, சேரனூர், செஞ்சி டவுன், பென்நகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். பராமரிப்பு பணி முடிந்தவுடன் மாலை 4 மணிக்குள் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்வாரியம் உறுதியளித்துள்ளது.

Tamil Nadu Power Cut

பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களின் அத்தியாவசிய மின் சாதனங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளுமாறு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதையும் படிங்க: மார்னிங் வானிலை அலெர்ட்! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுத்து எடுக்க போகும் கனமழை!