தமிழகம் உலகம்

தலைவலிக்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கணவரின் முகத்தை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமென கதறும் மனைவி! வெளியான துயர சம்பவம்!

Summary:

Tamilnadu Man dead in dubai for brain humour

கடலூர் மாவட்டம், தொழுதூரை அடுத்த வடகரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது முதல் மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் பிரசவத்தின்போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில்,  பாலகிருஷ்ணன் அஞ்சலை என்பவரை இரண்டாவதாக திருமணம்  செய்துகொண்டார். அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்து தனது குடும்பத்தினரை பார்த்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்றுள்ளார். பின்னர் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட போது அவரது மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென்று அவர் வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மனைவி அஞ்சலை தனது கணவரை எப்படியாவது ஊருக்கு கொண்டு வரவைத்து காப்பாற்றிவிட வேண்டும் என பல அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து போராடியுள்ளார். ஆனால் அதற்கிடையில் பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை கேட்ட மனைவி அஞ்சலை கண்ணீருடன்,  தனது கணவரின் முகத்தை கடைசியாக ஒரு தடவையாவது பார்த்துவிட வேண்டும் என கதறித் துடித்துள்ளார். மேலும் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும்,  ஆனால் ஏற்கனவே அவருக்கு கொரோனா பாதிப்பு  இருந்ததால்  உடலை எம்பார்மிங் செய்து இந்தியாவிற்கு அனுப்புவதில் சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement