தமிழகம் சமூகம்

ஏழைகளுக்கு இனிப்பான செய்தி! வங்கிக்கணக்கில் ரூ.2000 தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.!

Summary:

tamilnadu gvt - rs.200 - cm palani samy

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 செலுத்தப்படுவதற்கான நிகழ்ச்சியை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

கஜா புயல் பாதிப்பு மற்றும் போதிய மழையின்மையால் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் நிதி உதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மாவட்டத்திற்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி முதல்வா் பழனிசாமி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். 

கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நிதி தொடா்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது.


Advertisement