மதுக்கடைகள் திறக்கப்படுகிறதா.? தமிழக அரசு எடுத்த அடுத்த கட்ட முடிவு!

மதுக்கடைகள் திறக்கப்படுகிறதா.? தமிழக அரசு எடுத்த அடுத்த கட்ட முடிவு!


Tamilnadu govt appeals supreme court for tasmak

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 44 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், வியாழக்கிழமை தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்துவந்தநிலையில், வியாழக்கிழமை மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மது பிரியர்கள் குஷியுடன் மது வாங்கி திருவிழா போல் கொண்டாடி வந்தனர்.

Tasmak

ஆனால் பல இடங்களில் சமூக இடைவெளியின்றி கூட்டகூட்டமாக நின்று மது பிரியர்கள் வாங்கிச்சென்றுள்ளனர் இதையடுத்து,  நிபந்தனைகளை அமல்படுத்தாததால், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்  மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.