இனி பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!

Tamilnadu government


Tamilnadu government

இனி கடைகள் மற்றும் நிறுவனத்தின் பெயர் பலகைகள் வைக்கும் போது தமிழுக்கு தான் முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதை பற்றி தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் இனி தமிழில் தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

tamilnadu government

மேலும் கடை உரிமையாளர் மற்ற மொழி பெயர்களை பயன்படுத்த விரும்பினால் இரண்டாம் இடத்தில் ஆங்கிலத்திலும், மூன்றாம் இடத்தில் மற்ற மொழி பெயர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழக அரசின் இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என்றால் அந்த கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.