9 , 10-ஆம் வகுப்புக்கும் இனி இலவச லேப்டாப்; அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் திளைக்கும் மாணவர்கள்.!

9 , 10-ஆம் வகுப்புக்கும் இனி இலவச லேப்டாப்; அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் திளைக்கும் மாணவர்கள்.!



tamilnadu-governmend-announced-free-labtap---9th-10th-students

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போன்று இனி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பல அதிரடி திட்டங்களை தற்சமயம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு அறிமுகம் மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு என்று தனியாக உருவாக்கப்படும் டிவி சேனல் மற்றும் ஸ்டுடியோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. 

school education

தற்போது தமிழகத்தில் நடைமுறையிலுள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு முறை அரசு பள்ளிகளில் தான் முதலில் கடைபிடிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய நிகழ்வாகும். இதன் தொடர்ச்சியாக தற்போது 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இலவச லேப்டாப் இனி 9 , 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது: 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் போன்று, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம். இம்மாத இறுதிக்குள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று கூறினார்.