மீண்டும் தமிழகத்தில் டாப் கியர் எடுக்கும் கொரோனா.. மக்களே உஷார்.. எச்சரிக்கை.!!Tamilnadu Corona Effect

தமிழ்நாட்டில் இறங்கியிருந்த கொரோனா முகமானது மீண்டும் ஏற தொடங்கியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 2,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. செங்கல்பட்டில் 369 பேருக்கும், திருவள்ளூரில் 121 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதனைப்போல கோவை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருச்சி மாவட்டமும் கொரோனாவுடன் போராட தொடங்கியுள்ளது. 

இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறையான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, தேவையான இடங்களில் பகுதிநேர ஊரடங்கு அல்லது முழுநேர ஊரடங்கு போன்றவையும் தீவிரமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.