தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா.? இன்று நடக்கும் ஆலோசனை கூட்டம்.!

Summary:

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ சிறப்புக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போதுவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஆரம்பத்தை விட தற்போது கொரோனா வைரஸ் குறைந்து வருவதால் பல்வேறு தளவுர்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்தநிலையில் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் தடுப்பது குறித்து இன்று மருத்துவ நிபுணருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

வருகின்ற 31ம் தேதியுடன் நிறைவடை உள்ள நிலையில், மேலும் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement