ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த முதலமைச்சர்!

ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த முதலமைச்சர்!


Tamilnadu cm announcement for formar

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி  தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். 

edapadi

இந்தநிலையில், தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி  தெரிவித்தார்.