மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி!


tamilnadu-cm-announced-relief-funds-for-disabilities

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளின் நலன் கருதி 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசும் ஜூன் 30 வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

eps

தமிழகத்தில் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு செல்வோரின் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது தமிழகம். தமிழகத்தில் கொரோனா பாதுகாப்புக்காக தீவிர நடவடிக்கைகளை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் அரசு வழங்கி வருகிறது. 

இந்த சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.