மாணவ-மாணவிகள் இப்படிதான் இருக்கவேண்டும்.! அதுதான் எனது கனவு! தமிழக முதல்வர் வேண்டுகோள்!!

மாணவ-மாணவிகள் இப்படிதான் இருக்கவேண்டும்.! அதுதான் எனது கனவு! தமிழக முதல்வர் வேண்டுகோள்!!


tamilnadu-cm-advise-to-students

இன்று சென்னை குருநானக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர் அண்மைக்காலமாக தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் எனக்கு மன வேதனையை அளிக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் அதனை ஒரு தொழிலாக நினைக்காமல் தொண்டாக, கல்வி சேவையாக கருத வேண்டும்.

மேலும் மாணவச் செல்வங்கள் பட்டங்கள் வாங்க மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. அவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி போன்றவற்றை அளிக்க வேண்டும். தமிழக மாணவர்கள் எந்த ஒரு சோதனையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல்மிக்கவர்களாக  வளர வேண்டும்.மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள் போன்றவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

suicide

மாணவியர்களுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ மற்றும் உடல் ரீதியாகவோ தொல்லை தருவது போன்ற எத்தகைய இழிசெயல் நடைபெற்றாலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு உடனடியாக  தண்டனை பெற்றுத் தரும். மாணவ-மாணவியர்கள் அறிவுக்கூர்மையாக மட்டுமின்றி உடலுறுதியும், மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும். இதுதான் எனது கனவு.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவியரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாணவர்களும் உங்களது பிரச்சினைகளை, கனவுகளை பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். மாணவச் செல்வங்களே.. உங்களுக்கு எப்பொழுதுமே தற்கொலை எண்ணம் வரக் கூடாது. தலை நிமிரும் எண்ணம் மட்டுமே இருக்கவேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடவே கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே இருத்தல் வேண்டும் என கூறியுள்ளார்.